புதுச்சேரி ஐபிஎஸ் அதிகாரி தீபிகா: ஜம்மு காஷ்மீருக்கு பணியிட மாற்றம்.. காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரியில் முதல்வருக்கு மரியாதை தராததாகக் குற்றம்சாட்டப்பட்ட நேர்மையான பெண் ஐபிஎஸ் அதிகாரி தீபிகா ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த தீபிகா ஐபிஎஸ்?…
புதுச்சேரி காவல்துறையில் சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்கணிப்பாளராக பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி தீபிகா ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த இவர் 2018-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். பயிற்சி முடித்ததும் புதுச்சேரியில் பணி வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் இவர், நேர்மையான அதிகாரியாக செயல்பட்டார்.
புதுச்சேரியை மாற்றிய சிங்க பெண்:
இவர் வந்த பிறகு புதுச்சேரியில் பெரும்பாலும் குற்ற சம்பவங்கள் குறைய தொடங்கியது. மேலும் கஞ்சா விற்பனையை தடுக்கு தீவிர முயற்சி எடுத்ததின் பேரில், கஞ்சா விற்கும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கரெப்ஷன் சிறிது கூட இல்லாததால், உடன் பணிபுரியும் காவலர்களுக்கு மாமூல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இவரின் கீழ் பணிபுரியும் காவலர்களும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா மீது அதிருப்தியில் இருந்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல் அதிகாரிகள் எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களிடம் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்ததால் எதுவும் செய்யமுடியவில்லை. இந்நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சட்டப்பேரவை வந்த முதலமைச்சருக்கு காவல் கண்காணிப்பாளர் தீபிகா மரியாதை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
பணியிட மாற்றத்திற்கான பரபரப்பு பின்னணி:
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமிக்கும், அமைச்சர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தவில்லை என என்ஆர்காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இச்சூழலில் அவர் புதுச்சேரியிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் காவல்துறை அதிகாரிகள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
We have t amet, consectetur adipiscing elit. Curabitur vulputate vestibulum Phasellus rho cus, dolor eget viverra pretium, dolor tellus aliquet nunc, vitae ultricies erat elit eu lacus. Vestibulum