கர்நாடக பேருந்தில் சிறுநீர் கழித்த பொறியாளர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து மங்களூருவுக்கு கடந்த புதன்கிழமை இரவு கர்நாடக அரசு பேருந்து சென்றது. ஹூப்ளியில் நள்ளிரவு 2 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தேநீர் அருந்த சென்றனர்.
அப்போது 32 வயதான பொறியாளர் ஒருவர் பெண் பயணி அமர்ந்திருந்த இருக்கையின் மீது சிறுநீர் கழித்தார். தேநீர் அருந்திவிட்டு பேருந்தில் ஏறிய அந்த பயணி இருக்கையில் சிறுநீர் கழிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து நடத்துநரிடம் புகார் தெரிவித்தார்.
அந்த நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. பொறியா ளராக பணியாற்றும் அவர் மன்னிப்பு கேட்டதால் எச்சரிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாற்று இருக்கை ஒதுக்கப்பட்டது.