#அமீரக செய்திகள் #ட்ரெண்டிங் #தொழில்நுட்பம்

WhatsApp Update : மெசேஜ் அனுப்புவதில் புதிய வசதிகள்…வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தும் சூப்பர் அப்டேட்…!

WhatsApp Update : வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதில் புதிய வசதியை விரையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்-அப் செயலி:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய அப்டேட்

  அந்த வகையில், ஒருவருக்கு தவறாக அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை edit என்ற ஆப்ஷன் மூலம் அதனை திருத்திக் கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதுவும் தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்திளை 15 நிமிடங்களுக்குள் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.  இந்த புதிய வசதியை தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், disappearing message என்ற option-ல் புதிய வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கு முன்பாக disappearing message என்ற option-ஐ 24 நேரம், 7 நாட்கள், 90 நாட்களை மட்டுமே கொண்டு இருந்தது. தற்போது அதில் பல்வேறு ஆப்ஷன்களை  விரைவில் மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, 90 நாட்கள் வரை இருந்த நிலையில், தற்போது 1 வருடம், 180 நாட்கள், 60 நாட்கள், 30 நாட்கள், 21 நாட்கள், 14 நாட்கள், 6 நாட்கள், 5 நாட்கள், 4 நாட்கள, 3 மணி நேரம், 1 மணி நேரம் வரை இதனை பயனர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த வசதியும் இப்போதைக்கு சோதனை முயற்சியிலேயே உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page