#கல்வி & வேலைவாய்ப்பு

SSC CGL 2023: 7500 காலிப்பணியிடங்கள்.. பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட SSC.. முழு விவரம் உள்ளே..!

SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலியாக உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) பணிக்கான 7500 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், மே 3 ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்SSC
பணியின் பெயர்Combined Graduate Level (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு)
பணியிடங்கள்7500(தோராயமாக)
விண்ணப்பிக்க கடைசி தேதி03.05.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

SSC காலிப்பணியிடங்கள்:

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) தேர்வின் மூலம்  Assistant Section Officer, Sub Inspector, Assistant Audit Officer உள்ளிட்ட பல்வேறு பணிக்கான காலியாக உள்ள 7500 (தோராயமாக) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு:

8-27, 18-30, 18-32 மற்றும் 20-30 வயதிற்குள் உள்ள வெவ்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்திருக்க வேண்டும். 

CGL ஊதியம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முறை:

SSC CGL 2023 கணினி அடிப்படையிலான தேர்வு அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டு முறையில் நடத்தப்பட இருக்கின்றன. அடுக்கு-II தேர்வில் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/SC/ST/PwD/ESM தவிர) ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணத்தை மே 4 வரை செலுத்தலாம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்..? 

  • அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in க்கு செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் (ஹோம் பேஜ்) பதிவு இணைப்பை கிளிக் செய்யவும்
  • போர்ட்டலில் உள்நுழைந்து SSC CGL 2023க்கு விண்ணப்பிக்கவும்
  • ஆவணங்களை (documents) பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்கவும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page