#தமிழக செய்திகள்

PMK Stage Collapse: திடீரென சரிந்த மேடை; எகிறி குதித்து தப்பிய அன்புமணி ராமதாஸ்

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு பகுதிகளை பாமக கொடி என்னை ஏற்றுவதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சேலம் வந்தார். நேற்றைய தினம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியில் கொடியினை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மதியம் சேலத்தில் இருந்து வாழப்பாடி சென்றார். ‌

இந்த நிலையில் சேலம் வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்று விழா இன்று பிற்பகல் நடைபெற்றது. விழா மேடையில் ஏறிய அன்புமணி ராமதாஸிற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேடையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிக அளவில் ஏறியதால் அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மேடை சரிந்து விழுந்ததில் அனைவரும் கீழே விழுந்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெச்சரிக்கையாக மேடையில் இருந்து கீழே குதித்ததால் எந்தவித காயங்களும் என்று உயிர் கட்டினார். மேடையில் இருந்தவர்கள் கீழே விழுந்தவர்கள் அனைவருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல தொண்டர்கள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page