Cricket World Cup 2023: கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறை..! உலகக்கோப்பைக்கு அனைத்து அணிகளுக்கும் புது கேப்டன்கள்..!
இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது வருகின்ற அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை:
2023ம் ஆண்டுக்காக ஒருநாள் உலகக்கோப்பைக்கான தொடரை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இந்த தொடருக்கு முன்னதாக ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில் ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கிறது. இந்த தகுதிச்சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து (அ) தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாட இருக்கின்றன. இந்த தகுதிச்சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும்.
இந்தநிலையில், வருகின்ற உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் புது கேப்டன்களின் கீழ் விளையாட இருக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அணிகளுக்கு தலைமை தாங்கிய ஒரு கேப்டனும் இந்தாண்டு எந்த அணியையும் வழிநடத்தவில்லை. இதுவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.